றிஷாத் பதியுதீன் தலைமையில் செயல்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்

Report Print Mubarak in அபிவிருத்தி

மாகாணசபை தேர்தலுக்கான ஆயத்த வேலைகளை முன்னெடுக்கும் செயல்திட்டத்திற்கான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

பிரதி அமைச்சர் அப்துல்லா மஹரூப்பின் அமைச்சில் இன்று அமைச்சர் றிஷாத் பதியுதீன் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது மாகாணசபைக்கான வேட்பாளர்கள் சம்பந்தமான பரிசீலனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் கட்சியின் பதவிகளையும், சுகபோகங்களையும் அனுபவித்து தற்போது கட்சி கொள்கைக்கு முற்றாக மாற்றுக்கட்சிகளுடன் இரகசிய தொடர்புகளை வைத்திருக்கும் நபர்கள் சம்பந்தமாகவும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

Latest Offers