ஏறாவூர் ஆதார வைத்தியசாலை ராஜிதவினால் ஆரம்பித்து வைப்பு

Report Print Rusath in அபிவிருத்தி

மட்டக்களப்பு, ஏறாவூர் ஆதார வைத்தியசாலையினை சுகாதார போஷனை மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன அங்குரார்ப்பணம் செய்து வைத்துள்ளார்.

இவ் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

இவ்வைத்தியசாலை சீன அரசாங்கத்தின் 234 மில்லியன் ரூபாய் நிதியுதவியுடன் நவீன வசதிகளைக் கொண்ட நோயாளர் விடுதி, மகப்பேற்று விடுதி, இரத்த வங்கி, சத்திரசிகிச்சைக் கூடம் ஆரம்ப சிகிச்சைப் பிரிவு என்பவை அடங்கலாக 3 மாடிக் கட்டிடமாக அமையப் பெறவுள்ளது.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா, சுகாதார போஷணை மற்றும் சுதேச வைத்தியத்துறை இராஜாங்க அமைச்சர் பைஸல் காஸிம், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபைத் தலைவர் எம்.எஸ். சுபைர், மாவட்ட அரசாங்க அதிபர் எம். உதயகுமார், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் உட்பட சுகாதார திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

வீடியோ - அப்துல்சலாம் யாசீம்