தெனியாய, செம்புவத்தை தோட்டத்தில் தனி வீட்டுத்திட்டம் ஆரம்பித்து வைப்பு

Report Print Gokulan Gokulan in அபிவிருத்தி

மாத்தறை - தெனியாய, செம்புவத்தை தோட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள 50 தனி வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் தலைமையில் இன்று இந் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் நிதியொதிக்கீட்டில் 50 தனிவீடுகள் நிர்மாணிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க, மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், அம்பாந்தோட்டை இந்திய உதவி உயர்ஸ்தானிகர் பிரேம் கே. நாயர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Latest Offers