குச்சவெளி பிரதேச அபிவிருத்தி தொடர்பான மீளாய்வு

Report Print Gokulan Gokulan in அபிவிருத்தி

திருகோணமலை, குச்சவெளியில் பிரதேச அபிவிருத்தி தொடர்பான மீளாய்வும் 2019ஆம் ஆண்டுக்கான நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெற்றுள்ளது.

இக் கலந்துரையாடல் குச்சவெளி பிரதேச செயலக மண்டபத்தில் இன்று பிரதேச செயலாளர் தனேஸ்வரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இக் கலந்துரையாடலில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவரும் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதியமைச்சருமான அப்துல்லா மஹரூப் பங்கேற்றுள்ளார்.

அபிவிருத்திக்காக ஒதுக்கப்படுகின்ற நிதியினூடாக உரியவாறு உரிய காலப்பகுதிக்குள் திட்டங்களை நடை முறைப்படுத்துமாறு பிரதியமைச்சர் இதன் போது தெரிவித்துள்ளார்.

நீர்ப்பாசன நடவடிக்கைகள் தொடர்பான மீளாய்வும் இதன் போது மாவட்ட நீர்ப்பாசன பணிப்பாளர் ஏ.எல்.ஜௌபரால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

காலதாமதமின்றி செயற்திட்டங்களை பயனுள்ள வகையில் முன்னெடுக்குமாறும் அபிவிருத்திக்கு தடைகளாக இருக்கும் விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கைகளை எடுப்பதாகவும் பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் இதன் போது தெரிவித்துள்ளார்.

Latest Offers