பிரதியமைச்சரால் அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பித்து வைப்பு

Report Print Gokulan Gokulan in அபிவிருத்தி

துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப்பினால் திருகோணமலை, தம்பலகாமத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

அபிவிருத்தித் திட்டங்களை வைபவ ரீதியாக திறந்து வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

தம்பலகாமத்தில் பொற்கேனி, மீரா நகர் உள்ளிட்ட இன்னும் பல பகுதிகளில் கொங்ரீட் வீதிகள் மற்றும் வடிகால்கள் என்பன மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன.

கம்பரெலிய, கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி விசேட நிகழ்ச்சித் திட்டம், நீண்டகாலம் இடம் பெயர்ந்தோரை மீள்குடியேற்றுவதற்கான திட்ட முகாமைத்துவ அலகு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் ஊடாக பிரதியமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில் குறித்த அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இப் புதிய அபிவிருத்தி நிகழ்வுகளை மக்களிடம் கையளிக்கும் வைபவத்தில் பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் வைத்தியர் ஹில்மி முகைதீன் பாவா, தம்பலகாம பிரதேச சபை உறுப்பினர் தாலிப் அலி, பிரதியமைச்சரின் இணைப்பாளர் ஈ.எல்.அனீஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வட்டார வேட்பாளர்களான ஆபிலூன், ஏ.சீ.நஜிமுதீன் உட்பட கட்சி ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

Latest Offers