வடமாகாண பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

Report Print Givitharan Givitharan in அபிவிருத்தி

வடமாகாண கல்வி வலய பாடசாலைகளுக்கு பெருந்தொகை விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் இன்று வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

யாழ். இந்துக்கல்லூரியின் சிட்னி பழைய மாணவர்களுடன் ஏனைய நாடுகளிலும் உள்ள பழைய மாணவர் கிளைகளும் இணைந்து இவ்விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்துள்ளனர்.

இதற்காக வட மாகாணத்தில் உள்ள நிதிவள குறைபாடுகள் காணப்படும் 155 வரையான பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டிருந்தன.

இப் பாடசாலைகள் அனைத்திற்கும் சுமார் 2 கோடி பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.