அரசாங்கத்தின் சிறப்பு நடவடிக்கை! ஏப்ரல் மாதம் முதல் இலவச நுழைவு விசா

Report Print Murali Murali in அபிவிருத்தி

எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் ஆறு மாதங்களுக்கு இலவச நுழைவு விசா வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, ஏப்ரல் முதலாம் திகதி முதல் தெரிவு செய்யப்பட்ட சில நாடுகளுக்கு ஆறு மாதங்களுக்கு இலவச விசா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் இலங்கையில் சுற்றுலா துறையின் அபிவிருத்தி செய்ய முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், தாய்லாந்து, ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா, தென் கொரியா, கனடா, அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, நியூசிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு இலவச நுழைவு விசா வழங்கப்படவுள்ளது.