முல்லைத்தீவில் பாரம்பரிய உற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டது!

Report Print Mohan Mohan in அபிவிருத்தி

முல்லைத்தீவு - துணுக்காய் பகுதியில் பாரம்பரிய பொருள்கள் தயாரிக்கும் நிலையம் ஒன்று இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந்த பாரம்பரிய உற்பத்திகள் பொருள் தயாரிக்கும் அபிவிருத்தி நிலையத்தினூடாக துணுக்காய் பிரதேச மகளிர் அபிவிருத்தி நிலையத்தில் பணிபுறியும் பெண்கள் அருகிவரும் தமிழர் பாரம்பரிய பண்பாட்டு பொருட்களை எதிர்காலத்தில் உற்பத்தி செயவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நிகழ்வு துணுக்காய் பிரதேச கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் பா மயூரன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

மேலும் துணுக்காய் பிரதேச மகளிர் அபிவிருத்தி நிலையத்தினரால் தாயாரிக்கப்பட்ட நவீனபொருட்களும் இன்று கண்காட்சிப்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக துணுக்காய் பிரதேச செயலாளர் கு பிரபாகரமூர்த்தி, சிறப்பு விருந்தினராக ச.நந்தசீலன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் பா.மாலினி, மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலர்கலந்து சிறப்பித்துள்ளனர்.