இந்த வருடத்திற்குள் யாழ்ப்பாணத்தில் ஏற்படவுள்ள புரட்சி!

Report Print Vethu Vethu in அபிவிருத்தி

யாழ்ப்பாணத்தில் 150 மாதிரி கிராமங்களை அமைக்கவுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

வலிகாமம் மேற்கில் நேற்று பொன்னகர் கிராமத்தை திறந்து வைத்து அமைச்சர் உரையாற்றினார்.

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் செப்டம்பர் மாத இறுதிப் பகுதியளவில் 150 மீள் எழுச்சி வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாக தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் தற்போது 106 வீடமைப்புத் திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், மேலும் 150 வீடமைப்பு திட்டத்தை ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்காக 5.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டின் செப்டம்பர் மாத இறுதிக்குள் நாடு முழுவதும் 2,500 வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பிப்பதே அமைச்சின் இலக்காகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers