கேகாலையில் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ள புதிய கிராமம்

Report Print Thirumal Thirumal in அபிவிருத்தி

கேகாலையில் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்ட புதிய கிராமம் ஒன்று மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கேகாலை, டெனிஸ்வத்த தோட்டத்தில் 48 வீடுகள் கொண்ட வீ. பீ. கணேசன் புரம் எனும் புதிய கிராமம் நேற்று வைபவ ரீதியாக மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மனோ கணேசனின் தந்தையும் முன்னாள் யூனியன் தலைவரும் நடிகருமான வீ. பீ. கணேசனின் பிறப்பிடமானதால் ஞாபகமாக அவருடைய பெயர் சூடப்பட்டுள்ளது.

2016 டெனிஸ்வத்த தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவ்வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் அமைச்சர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுஜிதா விஜயமான்ன, சுஜித் பேரேரா மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர்.