கொழும்பில் அமைக்கப்படவுள்ள மற்றுமொரு பிரமாண்டம்!

Report Print Murali Murali in அபிவிருத்தி

தெற்காசியாவில் மிக உயரமான மேம்பாலம் கொழும்பில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,

25 பில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட உள்ள இந்தப் பாலம் 5 மாடிகள் உயரத்தைக் கொண்டதாக இரண்டு கட்டடத் தொகுதிகளில் அமைக்கப்பட உள்ளது.

175 மீற்றர் உயரத்தைக் கொண்டதும், 10 மீற்றர் அகலத்தைக் கொண்டதாக இந்த பாலம் நிர்மாணிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.