திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையின் கீழ் இயங்குகின்ற பயிற்சி நிலையங்களில் பயிற்சி நெறிகளை மேம்படுத்துவது சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கிற்கும் தொழில் பயிற்சி அதிகார சபையின் (VTA) தலைவர் ரவி ஜயவர்தனவுக்குமிடையிலான கலந்துரையாடல் இன்று(13) மாலை அவருடைய அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன் போது கிண்ணியா பயிற்சி நிலையத்திற்கான புதிய வகுப்பறை கட்டிடத்திற்கு ரூபாய் 21 லட்சத்திற்கான மதிப்பீட்டறிக்கையும் கையளித்ததுடன் வரவு செலவுத் திட்டம் முடிவடைந்த பின் நிதியையும் தருவதாக உறுதியளித்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
சகல வசதிகளையும் கொண்ட மாவட்டத்திற்கான ஒரு பயிற்சி நிலையம் ஒன்றையும் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் இதன் போது ரவி ஜவர்தன கூறியதாகவும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.