அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க திருகோணமலைக்கு விஜயம்

Report Print Gokulan Gokulan in அபிவிருத்தி

மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க திருகோணமலைக்கு விஜயமொன்றை மேற்கொண்டு அங்கு பல நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார்.

குறித்த நிகழ்வுகள் இன்று பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்களின் விசேட பங்கேற்பில் நகர அபிவிருத்தி அதிகாரசபையில் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளன.

திருகோணமலை கரையோரத்தில் மரநடுகை திட்டம், 200 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபை நிர்வாக கட்டடமும் சுற்றுலா விடுதிக்குமான அடிக்கல் நடுதல், திருகோணமலை மக்கேய்சர் மைதானத்தில் நடமாடும் சேவை மற்றும் நகர அபிவிருத்தி தொடர்பிலான திருகோணமலை நகராட்சி மன்றத்தில் கலந்துரையாடல் என்பன இடம் பெற்றுள்ளன.

அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நடமாடும் சேவையினை ஆரம்பித்து வைத்த நிலையில் பல்வேறு திணைக்களங்களை சேர்ந்த உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு மக்கள் பிரச்சினைக்கான தீர்வினை இதன்போது வழங்கியுள்ளனர்.

இதில் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப், நாடாளுமன்ற உறுப்பினர் கே.துரைரட்ணசிங்கம், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Latest Offers