கிளிநொச்சியில் அமைச்சர் ரவி கருணாநாயக்க

Report Print Suman Suman in அபிவிருத்தி

பூநகரி பகுதியில் புதிதாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையம் தொடர்பான கலந்துரையாடல் அமைச்சர் ரவி கருணாநாயக்க தலைமையில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று 2.30 மணிக்கு இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் மின் கட்டணம் உரிய முறையில் கணிக்கப்படாது அதிக கட்டணத்தை ஒரே தடவையில் கட்டுமாறு மக்களை பணித்து மின்துண்டிப்பு இடம்பெறுகின்றமை தொடர்பில் அமைச்சரிடம் வினவப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் தான் ஆராய்வதாகவும், மூன்று மாதங்களிற்கு இந்த பிரதேசத்தில் உள்ள மக்களிற்கு இவ்வாறான இறுக்கமான கடைப்பிடிப்பை மேற்கொள்ள வேண்டாம் என அமைச்சர் இதன்போது அதிகாரிகளிற்கு பணித்தார்.

இக் கலந்துரையாடலில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் லார்ராலை மின் உற்பத்தி சபையின் தலைவர் முன்னாள் வடமாகணசபை உறுப்பினர் குருகுலராஜா பிரதேச சபை தவிசாளர்கள் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பூநகரி பிரதேச செயலர் திணைக்களங்களின் அதிகாரிகள் படையினர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.