கொழும்பு நகரில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரை கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்து வருவதாக அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.
அத்துடன் நிர்மாணப் பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனம் அடுத்த சில வாரங்களில் பணிகளை நிறைவு செய்து, கட்டடத்தை தொலை தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவிடம் கையளிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அமைச்சர் அஜித் பீ. பெரேரா தாமரை கோபுரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிர்மாணப் பணிகளை பார்வையிட்ட போதே இதனை கூறியுள்ளார்.
கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரை கோபுரம் தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடம். இதன் நிர்மாணப் பணிகளை சீன நிறுவனம் ஒன்றை மேற்கொண்டு வருகிறது.