சீனாவுடனான புதிய உடன்பாட்டில் கைச்சாத்திட்ட இலங்கை! 989 மில்லியன் டொலர் இலகு கடன்

Report Print S.P. Thas S.P. Thas in அபிவிருத்தி

சீனாவின் எக்சிம் வங்கியின் மூலம் மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்துக்காக, 989 மில்லியன் டொலர் இலகு கடனை வழங்கும் உடன்பாட்டில் சீனாவும் இலங்கையும் கையெழுத்திட்டுள்ளன.

நிதி அமைச்சில் இன்று நடந்த நிகழ்வில், அமைச்சின் செயலர் சமரதுங்கவும், சீன எக்சிம் வங்கி சார்பில், இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவானும் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் முதற்கட்டமான, கடவத்த தொடக்கம் மீரிகம வரையான பகுதியில் பணிகளை மேற்கொள்வதற்கு, 1.164 பில்லியன் டொலர் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மொத்த செலவில் 85 வீத தொகைக்கான கடனை சீன எக்சிம் வங்கி வழங்கவுள்ளது.