கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாரிய மாற்றம்

Report Print Jeslin Jeslin in அபிவிருத்தி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஆறு புதிய தரிப்பிடங்களைக் கட்டும் பணிகள் எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் நிறைவடையவுள்ளன.

விமான நிலைய அபிவிருத்தித் திட்ட பணிப்பாளர் எஸ்.எம்.ரபீக் இதனைத் தெரிவித்துள்ளார்.

6 பில்லியன் ரூபா செலவில், இரண்டு இலட்சம் சதுர மீற்றர் பரப்பளவில் ஆறு விமானத் தரிப்பிடங்கள் அமைக்கப்படுகின்றன.

புதிதாக அமைக்கப்படும் குறித்த தரிப்பிடங்களில் 23 விமானங்கள் ஒரே நேரத்தில் தரித்து நிறகக் கூடிய வசதிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடுமையான போக்குவரத்து நெருக்கடியைச் சமாளிக்க இந்தப் புதிய தரிப்பிடங்கள் உதவியாக இருக்கும் என விமான நிலைய அபிவிருத்தித் திட்ட பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.