மன்னாரில் 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான அபிவிருத்தி வேலைகள் ஆரம்பம்

Report Print Ashik in அபிவிருத்தி

மன்னார் - சாந்திபுரம் பகுதியில் உள்ளக வீதிகளின் அபிவிருத்திக்கு கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இரண்டு உள்ளக கிறவல் வீதிகளை அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

சாந்திபுரம் கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் 40 மில்லியன் ரூபாய்க்கான குறித்த வேலைத்திட்டங்கள் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் சாந்திபுர கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், மாதர் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொது மக்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த இரு வேலைத்திட்டங்களும் இரு மாத காலப்பகுதிக்குள் நிறைவு பெற்று வீதிகள் மக்களின் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.