ஜப்பானில் இலங்கையர்களுக்கு 14 துறைகளில் தொழில் வாய்ப்பு! நாளை உடன்படிக்கை கைச்சாத்து

Report Print Murali Murali in அபிவிருத்தி

இலங்கைப் பணியாளர்களுக்கு ஜப்பானில் 14 துறைகளில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது.

இதுதொடர்பான ஒப்பந்தம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் ஜப்பானின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருக்குமிடையில் ஜப்பானில் நாளை கைச்சாத்திடப்படவுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதுதெடர்பாக தெரிவிக்கையில், “இந்த ஒப்பந்தம் 10 வருடங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

தாதியர், கட்டடங்களை பராமரித்தல், இயந்திர தொழிற்றுறை, இலத்திரணியல் துறை, தொடர்பாடல் துறை, கட்டுமாணம், போக்குவரத்து மற்றும் பராமரிப்பு, மின்னணுத்துறை, கப்பற்றுறை, விமானத்துறை, விவசாயம், மீன்பிடித்துறை, உணவுப் பொருள்கள் உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் இலங்கையர்களுக்கு ஜப்பானில் தொழில்வாய்ப்பு கிடைக்கவுள்ளது.

9 நாடுகளுக்கு ஜப்பான் இந்த தொழில்வாய்ப்பை வழங்கவுள்ளது. இதில் 7ம் இடத்தில் இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.