பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக! வட மாகாண மக்களுக்கு பெரும் வரப்பிரசாதம்

Report Print Steephen Steephen in அபிவிருத்தி

போர் நடைபெற்ற காலத்தில் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட யாழ், பலாலி விமான நிலையம் இன்று மீண்டும் சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் நடைபெற்றதுடன் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் அதில் கலந்துக்கொண்டார்.

பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யும் தேசிய வைபவம் என இந்த நிகழ்ச்சி பெயரிடப்பட்டிருந்த போதிலும் நிகழ்வில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை.இந்த நிகழ்வில் தேசிய கீதம் இசைப்பது நிகழ்ச்சி நிரலில் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பலாலி விமான நிலையத்தில் இருந்து எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் இந்தியாவுக்கான விமான போக்குவரத்து ஆரம்பிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. சென்னை, ஹைத்ராபாத், கொச்சின், பெங்களூர், மும்பாய் போன்ற இந்திய நகரங்களுக்கு விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.