கொழும்பு நகரில் ஏற்படவுள்ள பாரிய நெருக்கடி!

Report Print Vethu Vethu in அபிவிருத்தி

2035ஆம் ஆண்டில் மேல் மாகாணத்தின் மக்கள் தொகை 91 இலட்சம் வரை அதிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு தேவையான வகையில் வீதி அபிவிருத்தி உட்பட உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவில்லை என்றால் பாரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும் என மேல் மாகாண அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2012ஆம் ஆண்டு வரையில் மேல் மாகாணத்தின் மக்கள் தொகை 58 லட்சமாகும். 2025ஆம் ஆண்டில் அதன் எண்ணிக்கை 78 லட்சம் வரை அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இதுவரை கொழும்பு நகரத்திற்கு நாள் ஒன்றுக்கு கார், வேன் மற்றும் முச்சக்கர வண்டி உட்பட இலகு வாகனங்ள் 4 இலட்சத்து 50 ஆயிரம் பயணிக்கும் நிலையில் நாள் ஒன்றுக்கு 29 ஆயிரம் பேருந்து உட்பட பொது போக்குவரத்து வாகனங்கள் பயணிக்கின்றன.

வெளி மாகாணங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 19 இலட்சம் பேர் கொழும்பிற்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் 2035ஆம் ஆண்டு வரையில் 44 லட்சம் பேர் வரையில் அதன் எண்ணிக்கை அதிகரிக்கும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலைமைக்கு முகம் கொடுப்பதற்கு திட்டம் ஏற்படுத்தவில்லை என்றால் தற்போதைய நிலையில் 10 மடங்குகளாக நெருக்கடி நிலை அதிகரிக்கும் ஆபத்துக்கள் உள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Latest Offers