மத்திய அதிவேக நெடுஞ்சாலை விரைவில் மக்கள் பாவனைக்கு: கபீர் ஹாசிம் நம்பிக்கை

Report Print Ajith Ajith in அபிவிருத்தி
402Shares

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்ட பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் நிறைவடையும் என்று நெடுஞ்சாலை மற்றும் சாலை அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷிம் இன்று தெரிவித்துள்ளார்.

இரண்டாம் கட்ட கட்டுமான பணிகள் உள்ளூர் ஒப்பந்தக்காரர்களாலேயே மேற்கொள்ளப்படுவதாகவும், 80 சதவீத பணிகள் முடிந்துவிட்டதாகவும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த வருடம் ஒகஸ்ட் மாதத்திற்குள் கட்டுமான பணிகளை பூர்த்திசெய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அடுத்த வருடம் ஜனவரி மாதத்திற்குள் முடிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

முதல் மற்றும் மூன்றாம் கட்ட கட்டுமானப் பணிகளும் தொடங்கியுள்ளதாகவும், கட்டுமானப் பணிகள் நிறைவடையும் வரை இரண்டாம் கட்டத்தின் மூலம் கண்டியை அடைய தற்காலிக பாதை ஒன்று அறிமுகப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

கண்டி-கொழும்பு பாதையை நிட்டம்புவா வரை நான்கு வழிச் சாலையாக விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமான பணிகள் நிறைவடையும் வரை பஸ்யாலைக்கு இணைப்புச் சாலையையும், மிரிகம நகரத்தில் இருந்து ஒரு பரிமாற்றத்தையும் உருவாக்கி, இதன் மூலம் வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டத்திற்குள் நுழைந்து குருநாகல் வழியாக கண்டியை அடைய புதிய பாதை அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.