கொழும்பு வாழ் மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்! இன்றுமுதல் புதிய வசதி

Report Print Vethu Vethu in அபிவிருத்தி

கொழும்பு வாழ் மக்களின் நன்மை கருதி இன்று முதல் வாவியில் படகு சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக யூனியன் பிளேஸ் பகுதியில் இருந்து கொழும்பு கோட்டை வரை உள்ள பேரே வாவியில் படகு சேவை ஆரம்பமாகவுள்ளது.

அடுத்தகட்டமாக கொழும்பு நகரிலுள்ள அனைத்து வாவிகள் ஊடாகவும் படகு சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து யூனியன் பிளேஸ் வரை பேருந்தில் பயணிக்கும் போது 30 நிமிடங்கள் செலவிடப்படுகின்றது. எனினும் படகு சேவையில் 9 - 10 நிமிடங்களுக்கு பயணித்துவிட முடியும்.

படகு சேவையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.

முதல் மாதம் மாத்திரம் இலவசமாக படகு சேவை பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவையின் மூலம் கொழும்பு வாழ் மக்களுக்கு போக்குவரத்து நெரிசல் குறைந்த பயணம் அமையவுள்ளதுடன், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நடவடிக்கையாகவும் இது அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers

loading...