இலங்கை இளைஞர்களின் மகத்தான கண்டுபிடிப்பு!

Report Print Vethu Vethu in அபிவிருத்தி

இலங்கையில் ஏரிகளை சுத்தம் செய்வதற்காக இரண்டு இளைஞர்கள் இணைந்து இயந்திரம் ஒன்றை தயாரித்துள்ளனர்.

குறித்த இரு இளைஞர்களும் சர்வதேச போட்டி ஒன்றின் இறுதிச் சுற்றிற்கு தெரிவாகியுள்ளனர்.

உலகின் முன்னணி தொழில்நுட்ப பல்கலைக்கழக நிறுவன MIT (Massachusetts Institute of Technology)யினால் புதிய கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

MIT Solve Challenge 2019 என்ற போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இலங்கை இளைஞர்கள் தெரிவாகியுள்ளனர். உலகளாவிய ரீதியில் ஆயிரக்கணக்கானோர் பங்குப்பற்றிய இந்த போட்டியின் இறுதி 60 பேரில் இலங்கை இளைஞர்களும் தெரிவாகி உள்ளனர்.

உலக புகழ்பெற்ற விஞ்ஞானிகள், வர்த்தகர்கள் தலைவர்களின் பங்களிப்புடன் இறுதி போட்டி அமெரிக்காவின் நிவ்யோர்க் நகரில் இடம்பெறவுள்ளது.


you may like this video