மக்கள் ஒத்துழைத்தால் அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்தலாம்!

Report Print Ashik in அபிவிருத்தி

மக்கள் தமது பூரண ஒத்துழைப்புக்களை வழங்குகின்ற போது வீதி அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்திக்கொள்ள முடியும் என மன்னார் நகரசபை உறுப்பினர் நிலாமுதீன் நகுசீன் தெரிவித்துள்ளார்.

மன்னார் - உப்புக்குளம் பகுதியில் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில் வீதி புனரமைப்பு பணிகள் இன்று காலை நடைபெற்றுள்ளது.

இதன்போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,

அமைச்சர் றிஷாட் பதியுதீன் தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைவாக எமது அபிவிருத்தி பணிகள் இடம்பெற்று வருகின்றது.

அமைச்சரின் பணிப்புரைக்கு அமைவாக நாங்கள் செயல்பட்டு வருகின்றோம். மக்களினதும், கிராமங்களினதும் தேவைகள் இனம் காணப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றது.

மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கும் பட்சத்தில் அபிவிருத்திப் பணிகளை நாங்கள் துரிதப்படுத்த முடியும் என அவர் தெரிவித்தார்.

இதில் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் பிரத்தியேக செயலாளர் றிப்கான் பதியுதீன், மன்னார் நகர சபை உறுப்பினர்களான நிலாமுதீன் நகுசீன், உவைசுல் ஹர்னி மற்றும் பிரிந்தாவனநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.