பிரபல்யம் அடையும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்! குறி வைக்கும் எயார்லைன்ஸ் நிறுவனம்

Report Print Vethu Vethu in அபிவிருத்தி

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக தமது சேவைகளை முன்னெடுக்க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அடுத்த ஆண்டுக்குள் யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு விமான சேவைகளை ஆரம்பிக்க முடியும் என்று நம்புவதாக, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி விபுல குணதிலக தெரிவித்துள்ளார்.

சமகாலத்தில் யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இயங்கக் கூடிய விமானங்கள் எம்மிடம் இல்லை. அதற்கு தேவையான சிறிய விமானங்கள் விரைவில் குத்தகைக்கு எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக இந்தியாவின் பிரதான நகரங்களுக்கு விமான சேவையை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 17ஆம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. இலங்கையின் மூன்றாவது சர்தேச விமான நிலையமாக இது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் சென்னை- யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவையை அலையன்ஸ் எயர் நிறுவனம் ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.