ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமான சேவையை விரிவுபடுத்த தீர்மானம்

Report Print Malar in அபிவிருத்தி

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமான சேவையை மேலுமாக 18 நகரங்களுடன் ஒன்றிணைத்து விரிவுப்படுத்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்தவகையில், ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள நகரங்களுடன் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமான சேவை ஒன்றிணைய உள்ளது.

கட்டார் விமான சேவையுடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், 56 நாடுகளுடனான 127 நகரங்களுடன் ஸ்ரீலங்கன் விமான சேவை கடமையாற்ற உள்ளதாக தலைமை நிறைவேற்று அதிகாரி விப்புல குணதிலக தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு முதல் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமான சேவையுடன் கட்டார் விமான சேவை இணைந்து சிறந்த சேவைகளை மேற்கொண்டு வருவதோடு, குறித்த இரண்டு விமான சேவைகளும் 13 சர்வதேச விமான சேவைகளுடன் இணைந்து தமது சேவைகளை முனனெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.