சட்டவிரோத மணல் அகழ்வை தடுப்பது தெடர்பில் கலந்துரையாட புதுக்குடியிருப்பு அபிவிருத்திக் குழுவில் தீர்மானம்

Report Print Gokulan Gokulan in அபிவிருத்தி

முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது பாரிய பிரச்சினையாக எழுந்துள்ள, சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுப்பது தொடர்பில் எதிர்வரும் 20ஆம் திகதியன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றினை நடத்த வேண்டும் என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று இடம்பெற்றது. இதன்போதே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கள்ளவெட்டை, மருதமடு, பேராறு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து இடம்பெறும், சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் மிகவும் பிரதானமாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 20ஆம் திகதியன்று மாவட்ட செயலாளர் தலைமையில் அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் ஒன்றிணைந்து இந்த சட்டவிரோத செயற்பாட்டை கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையடப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

நெல்லின் விலை நிர்ணயம், காணிப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதில் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் ச.கனகரதினம், நாடாளுமன்ற உறுப்பினர்களான சாந்த சிறீஸ்கந்தராசா, காதர் மஸ்தான், புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செல்லையா பிரேம்காந்த், மற்றும் அரச அதிகாரிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers

loading...