கிராம மட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பில் மன்னார் மாவட்டத்தில் கலந்துரையாடல்

Report Print Ashik in அபிவிருத்தி

மன்னார் மாவட்டத்தில் இவ்வருடம் மாவட்ட ரீதியாகவும், பிரதேச ரீதியாகவும் மேற்கொள்ள வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும், அபிவிருத்தி முன்னெடுப்புக்கள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கும் ஒன்றுகூடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மாவட்ட காரியாலயத்தில் இன்று காலை இந்த ஒன்றுகூடல் நடைபெற்றுள்ளது.

இதன்போது கிராம ரீதியாக இயங்கி வரும் பெண்கள் அமைப்புக்கள் மற்றும் நேசக்கரம் பிரஜைகள் குழு அங்கத்தவர்கள் ஊடாக 2020ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட இருக்கின்ற கிராம, பிரதேச மட்ட செயற்பாடுகள், உள்ளக அபிவிருத்தி சமூக சேவை செயற்பாடுகள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டது.

அத்துடன் கிராம மட்டத்தில் செய்யப்பட வேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான குறைபாடுகளை இனம்கண்டு அவற்றை நிவர்த்தி செய்யக்கூடிய பிரதேச சபை மற்றும் நகர சபை உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக நிறுவனங்களுக்கு தெரியப்படுத்தும் முகமாக ஏற்பாடு செய்யப்படவுள்ள பொதுகலந்துரையாடல் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

இதில் சாந்திபுரம், ஜீவபுரம், ஜிம்ரோன் நகர், பள்ளிமுனை பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் நேசகரம் பிரஜைகள், குழுவின் அங்கத்தவர்கள், வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் செயலாளர், மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அதிகாரி மற்றும் மேரி பிரியந்தா உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.