கட்டுநாயக்க விமான நிலையத்தில் அறிமுகமாகும் புதிய வசதி!

Report Print Vethu Vethu in அபிவிருத்தி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து பிரதான நகரங்களுக்கான ரயில் டிக்கட் வழங்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சீ.பீ.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ரயில் போக்குவரத்து சேவையிலுள்ள புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இந்த ரயில் டிக்கட்களை கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே பெற்றுக் கொள்ள முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ரயில் சேவையில் உள்ள குறைப்பாடுகளை கண்டறிவதற்காக கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers