பச்சிலைப்பள்ளியில் பாலங்களை புனரமைப்புச் செய்யும் பணிகள் ஆரம்பம்

Report Print Yathu in அபிவிருத்தி

பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் சேதமடைந்துள்ள பாலங்களை புனரமைப்புச் செய்யும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட மக்கள் போக்குவரத்து மேற்கொள்ள முடியாமல் பழுதடைந்து காணப்படும் பல பாலங்கள் மற்றும் மதகுகளை புனரமைக்கும் பணிகளை பச்சிலை பள்ளி பிரதேச சபை முன்னெடுத்துள்ளது.

இவ் வேலைத்திட்டத்தின் முதல்கட்டமாக முல்லையடி - வண்ணாங்கேணி இணைப்பு வீதி பாலம் புனரமைப்பதற்கான பூர்வாங்க வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்தொடர்ச்சியாக குறித்த பகுதியில் உள்ள ஏனைய பாலங்கள் மற்றும் வீதிகளை புனரமைப்பதற்கான வேலைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Latest Offers