கொழும்பில் அறிமுகமாகும் புதிய போக்குவரத்து வசதி!

Report Print Vethu Vethu in அபிவிருத்தி

கொழும்பு நகரம் மற்றும் சுற்றுப்புறத்தில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் டிராம் கார் (Tram car) திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இந்தத் திட்டத்தை சீன நிறுவனம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் முதலாவது கட்டம் கொட்டாவையில் இருந்து புறக்கோட்டை வரை முன்னெடுக்கப்படவும் என சீன ரயில்வே குழும நிறுவனப் பிரதிநிதிகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைலெவல் வீதியின் 14 அடி உயரமான தண்டவாளத்தில் ஓடும் இந்த டிராம் வண்டிகள் ஒவ்வொன்றிலும் 8 முதல் 11 பயணிகள் வரை பயணிக்க முடியும்.

முழுமையாக சீன முதலீட்டுடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இத்திட்டம் இன்னும் ஒன்றரை வருட காலத்தில் முழுமை பெறவுள்ளது.

இந்த டிராம் கார் திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர அமைச்சின் செயலாளர் காமினி செனவிரட்னவுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

Latest Offers