கொழும்பில் மற்றுமொரு பிரமாண்டமான கட்டடம்!

Report Print Vethu Vethu in அபிவிருத்தி

கொழும்பில் மிகப் பிரமாண்டமான முறையில் வீட்டுத்தொகுதி ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.

கொழும்பு 7, வோர்ட் பிளேஸ் பகுதியில் அமைக்கப்படும் இந்த வீட்டுத் தொகுதி, அந்தப் பகுதியிலுள்ள மிகப்பெரிய கட்டடமாக கருதப்படுகின்றது..

அதி சொகுசு முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த கட்டடம் 37 மாடிக்கும் அதிமானதாகும்.

இலங்கையில் தற்போது நிர்மாணிக்கப்படும் மிகவும் நீளமான Infinity Pool அந்த கட்டடத்தினுள் அமைக்கப்பட்டுள்ளது. அதன் நீளம் 71 மீற்றராகும்.

உயர்மட்ட வாழ்க்கைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டுள்ள இந்த கட்டடத்தில் மிகப்பெரிய Sky bar ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

வினோதம் மற்றும் பிற நிகழ்வுகளுக்காக 40,000 சதுர அடி இடவசதி கொண்ட பகுதியும் இங்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் வீட்டு தொகுதியில் வாழும் மக்களின் பாதுகாப்பிற்காக பாரிய வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

லிப்ட் ரெஜிஸ்டர், அணுகல் அட்டை, முக்கிய அமைப்புடன் ஸ்மார்ட் கதவு கொண்டு இந்த இந்த வீட்டு தொகுதி மிகவும் பாதுகாப்பாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.