யாழ். சர்வதேச விமான நிலையத்திற்கு பெருந்தொகை நிதி வழங்கும் இந்தியா!

Report Print Murali Murali in அபிவிருத்தி

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்த 11 கோடியே 83 லட்சம் ரூபா நிதி வழங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்தியாவின் அலையன்ஸ் ஏர் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் சென்னைக்கு ஒரு விமான சேவையை தொடங்கியபோது, யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்தில் இருந்து விமானங்களை இயக்கும் முதல் நிறுவனமாக மாறியது.

இந்த மாதம் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு முதல் பயணிகள் விமான சேவை தொடங்கியது. இதன் மூலம் யாழ்ப்பாணம், சென்னை இடையே பயணிகள் விமான போக்குவரத்து சீராக நடைபெறும்.

இந்நிலையில், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்த இந்தியா முன்வந்துள்ளது. இதற்காக 11 கோடியே 83 லட்சம் ரூபா நிதி வழங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.

இந்த திட்டத்துக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில் யாழ். சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்த விரைவில் இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று இலங்கை அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின்படி, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் முனையம் மாற்றியமைப்பு, மின் விநியோகங்கள், பயன்பாட்டு சேவைகள், போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்படும் என்று இலங்கை அறிவித்துள்ளது.

இதன் காரணமாக வடக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் சமூக பொருளாதார நலன்கள் அதிகரிக்கும் என தகவல்கள் கூறுவதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers

loading...