2021ம் ஆண்டிற்குள் இலங்கை மஞ்சள் உற்பத்தியில் தன்னிறைவு பெறும் என்று விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் சுப ஹீன்கெந்த தெரிவித்துள்ளார்.
இதுவரையில், சுமார் 1500 ஹெக்டேர் பரப்பில் மஞ்சள் பயிரிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன் மூலம் 2021 பெப்ரவரி மாதத்திற்குள் சுமார் 22,500 மெட்ரிக் தொன் மஞ்சள் அறுவடை செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அறுவடையில் இருந்து 4,000 மெட்ரிக் தொன் விதைகள் அகற்றப்பட்டாலும், மீதமுள்ளதைக் கொண்டு நாட்டின் மஞ்சள் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
நாட்டில் ஆண்டுதோறும் மஞ்சள் நுகர்வு 7500 மெட்ரிக் தொன் ஆகும். 2019ம் ஆண்டில் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட மஞ்சளின் அளவு 1200 மெட்ரிக் தொன் மட்டுமே.
ஏனைய தேவைகளை பூர்த்தி செய்ய கடந்த ஆண்டில் இறக்குமதி செய்யப்பட்ட மஞ்சளின் அளவு 5382 மெட்ரிக் தொன் ஆகும். இதற்காக 1200 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
தற்போது மஞ்சள் இறக்குமதி செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கு தீர்வாக உள்ளூர் விவசாயிகள் மஞ்சள் உற்பத்தி செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
இதேவேளை, நாட்டிற்கு கடத்தப்பட்ட 33,000 கிலோ மஞ்சளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு 110 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.