இலங்கை கோப்பிக்கு ஏற்பட்டுள்ள மவுசு! அமைச்சர் கூறிய தகவல்

Report Print Murali Murali in அபிவிருத்தி

ஜப்பானில் இலங்கை கோப்பிக்கு அதிக கிராக்கி இருப்பதாகவும், நுவரெலியா மாவட்டத்தில் கோப்பி வளரும் கிராமங்கள் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நுவரெலியா போன்ற மலைப்பகுதிகளில் பயிரிடப்படும் இந்த வகை கோப்பி இன்னும் ஏற்றுமதியிலிருந்து அதிக வருமானத்தை ஈட்டுகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த வகை கோப்பி மீது ஜப்பானின் வலுவான ஆர்வம் ஏனைய நாடுகளிலும் பிரபலப்படுத்தப்படலாம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோப்பி விவசாயிகளுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும், கோப்பி தோட்டங்கள் வளமாகிவிட்டால் ஏற்றுமதி வருவாய் மூன்று முதல் நான்கு மடங்கு அதிகரிக்கும் எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை, தேயிலைக்கு இதுவரை புகழ் பெற்ற நம் நாடு விரைவில் கோப்பிக்கும் உலகப் புகழ் பெறும் என்று அமைச்சர் பந்துல குணவர்தன நம்பிக்கை வெளியிட்டார்.