கொழும்பு மெனிங் சந்தை இன்று பேலியகொடையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இதன்போது உரையாற்றிய பிரதமர், கொழும்பின் வாகன நெருக்கடியை தவிர்க்கும் முகமாகவே புதிய மரக்கறி சந்தை பேலியகொடையில் அமைக்கப்பட்டது என்று குறிப்பிட்டார்.
முன்னதாக பேலியகொட மீன் சந்தை நிர்மாணிக்கப்பட்டபோதே மரக்கறி சந்தையையும் பேலியகொடையில் நிர்மாணிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக பிரதமர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் மெனிங் சந்தையின் நிர்மாணத்தை இந்த வருடத்தில் மேலும் விரிவுப்படுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
புதிய நிர்மாணத்தில் 1192 வியாபாரத்தளங்கள் உள்ள நிலையில் 600 வாகனங்களும் தரித்து நிற்கமுடியும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.