கண்டாவளை - ரங்கன் குடியிருப்பு கிராம கொங்கிரீட் வீதி அமைக்கும் பணியை அடுத்த வருடம் ஆரம்பிக்க முடிவு

Report Print Suman Suman in அபிவிருத்தி
61Shares

கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட ரங்கன் குடியிருப்பு கிராமத்தில் 2100 மீற்றர் நீளமான கொங்கிரீட் வீதியை அமைக்கும் பணிகளை அடுத்த வருடம் ஆரம்பிக்க முடிவு எட்டப்பட்டுள்ளது.

குறித்த கிராமத்தின் உள்ளூர் பயன்பாட்டு வீதிகள் புனரமைக்கப்படாத நிலையில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.

இந்த நிலையிலேயே அடுத்த வருடம் ஜப்பானின் நிதியுதவியின் கீழ் குறித்த வீதிகள் புனரமைக்கப்படவுள்ளன.

வீதி கட்டமைப்புடன் வடிகான் வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்படவுள்ளதால் அக்கிராமத்தில் வசிக்கும் மக்கள் முழுமையான நன்மை அடையவுள்ளதாக தெரியவருகிறது.

வீதி அபிவிருத்தி திட்டவரைபுகள் முழுமையடைந்துள்ள நிலையில் நேற்றைய தினம் குறித்த பகுதியை ரிடெப் திட்ட குழுவினர் பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.