டென்மார்க் தேசத்தில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு

Report Print Dias Dias in புலம்பெயர்

தமிழீழ தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்கள் இன்று தமிழர் தாயகத்திலும், தமிழர்கள் வாழும் தேசங்களிலும் நினைவுகூரப்பட்ட நிலையில் டென்மார்க்கிலும் தேசிய மாவீரர் நாள் மிகவும் உணர்வு பூர்வமாக நடாத்தப்பட்டுள்ளது.

சுடர் ஏற்றலுடன் ஆரம்பமாக குறித்த நிகழ்வில், டென்மார்க் பொறுப்பாளர் தேசிய கொடி ஏற்றியதுடன் அதன் பின் சுடர் வணக்கம், மலர் வணக்கம் மற்றும் அகவணக்கம் இடம்பெற்றுள்ளது.

தமிழீழக்கனவுடன் தமிழ் மக்களின் விடுதலைக்காய் தங்கள் உயிர்களை ஆகுதியாக்கிய தேசப்புதல்வர்களின் கல்லறைக்கு சுடரேற்றும் போது மாவீரர் துயிலுமில்லப்பாடல் ஒலிபரப்பப்பட்டது.

எமது தேசியத்தலைவரின் 2008ம் ஆண்டு மாவீரர் நாள் உரை திரையில் காண்பிக்கப்பட்டது. தேசியத்தலைவரின் சொல்லுக்கு செயல் வடிவம் கொடுத்து, மாவீரர் நாள் மண்டபத்தில் இளையோர்கள் முன்னின்று மாவீரர் நாள் நிகழ்வை மிகவும் உணர்வுபூர்வமாக நடத்தியிருந்தார்கள்.

தமிழீழ தாய்நாட்டின் விடிவிற்காக தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்களுக்கு மக்கள் திரள் திரளாக வந்து வணக்கம் செலுத்தினார்கள்.

எமது விடுதலைக்காய் விதைத்தவர்களின் உணர்வுகள், இலட்சிய தாகம், கனவுகள் என்பன எம்மால் மறக்கப்பட முடியாதவையும், புனித தன்மை வாய்ந்தவையாகவும் உள்ளன.

மாவீரர் நாள் நிகழ்வில் எழுச்சி உரைகள், கவிதைகள், எழுச்சி நடனங்கள், நாடகம் என்பன இடம்பெற்றன. அனைத்தும் மாவீரர்களின் தியாகத்தையும், அவர்களின் வீரச்செயல்களையும் உணர்த்துபவையாக அமைந்துள்ளன.

மாவீரர்களின் கனவை எல்லோரும் சேர்ந்து நனவாக்க வேண்டும். அவர்களின் தியாகத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அவர்களின் தியாகத்தை அடுத்த சந்ததிக்கு சொல்லவேண்டிய கடமை இளையோரின் கையில் உள்ளது.

தேசிய மாவீரர் நாள் நிகழ்வானது, நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடனும், 'தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்' என்ற தாரக மந்திரத்துடனும் நிகழ்வு நிறைவு பெற்றது.

இதேவேளை, தமிழர் தாயகப் பகுதிகளிலும் தமிழர்கள் வாழும் தேசங்களிலும், ஒரே நேரத்தில் நினைவுச்சுடர்கள் ஏற்றப்பட்டு நினைவு கூரல் அனுஷ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

Comments