பின்லாந்தில் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தினம்

Report Print Karan in புலம்பெயர்

பின்லாந்தின் தலைநகர் ஹெல்சின்கிலில் நேற்று மாலை 4.30 மணியளவில் மாவீரர் நாள் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளது.

குறித்த நிகழ்வு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஒழுங்குப்படுத்தலில் பின்லாந்து தமிழர் பேரவையைச் சேர்ந்த தினேஷ் தலைமையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் முதல் நிகழ்வு ஜெயநாதனால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டுள்ளது. மற்றும் யோகேஸ்வரன் தமிழீழ தேசிய கொடியினை ஏற்றி வைத்துள்ளார்.

இந்த நிகழ்வில் மாவீரர் நாள் அறிக்கை ஒலிக்கப்பட்டதுடன் மாவீரர்களுக்கும் போரினால் கொல்லப்பட்ட பொதுமக்களுக்கும் அக வணக்கமும் மலர் வணக்கமும் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் மாவீரர் நாளை அனுஷ்டிக்கும் முகமாக பல்வேறு கலை கலாச்சார நிகழ்வுகளும் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

Comments