புலம்பெயர் தேசங்களில் உணர்வுப்பூர்வமாக இடம்பெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு நாள்

Report Print TGTE Canada Media in புலம்பெயர்

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 2009ம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்கால் சமருடன் முடிவுக்கு வந்தது. இதன் போது பல ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், ஆண்டு தோறும் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் பல்வேறு நாடுகளிலும் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

இதன்படி, இம்மாதம் 12ம் திகதி முதல் 18ம் திகதி வரையான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தையொட்டி தமிழீழத் தேசிய துக்க நாளை தமிழர் நினைவு அறக்கட்டளையுடன், நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் இணைந்து ஒழுங்கு செய்துள்ளது.

அந்த வகையில் பல இடங்களில் வணக்க நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அலுவலகத்திலும் வணக்க நிகழ்வு நடைபெற உள்ளது.

பின்வரும் இடங்களில் வணக்க நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

May 17 – Markham City Hall (Warden/Hwy7)
5.00pm – 7.00pm
647-408-8049

May 18 - TGTE office
24-5210 Finch Ave. East
10.00am - 4.00pm
647-808-7766

May 18 – Ajax
St. Francis Centre
78 Church st, South (Church/Kingston)
5.00pm -7.00pm
647—986-2976

May 18 – Mississauga City Hall
300 City Centre Drive
5.00pm – 7.00pm
416-808-1864
416-830-4305

இரத்ததானமும் உணவுசேகரிப்பும்

May 19 - Cedarbrook Community Centre
11.00am - 2.00pm
647-808-7766
416-841-5035

வழமைபோல் 4 வது வருடமாக முள்ளிவாய்க்காலில் உயிர் இழந்தவர்களின் நினைவாக, மார்க்கம் மாநகரசபையுடன் இணைந்து மரம் நடுகையையும் மேற்கொள்கிறது

May 19 – Markham
10.00am – 12.00noon
416-805-3085