லண்டன் தமிழர் தன் பிள்ளைகளை ஏன் கொலை செய்தார்? - ஒரு நேரடி ரிப்போர்ட்

Report Print Gokulan Gokulan in புலம்பெயர்

கடந்த வாரம் லண்டனில் ஒரு புலம்பெயர் தமிழர் தனது இரண்டு பிள்ளைகளை கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டு, தன்னையும் வெட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்திருந்தார்.

படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த தந்தை கொலை செய்த தனது பிள்ளைகளில் ஒருவருக்கு 3 வயது. மற்றைய பிள்ளைக்கு ஒரு வயது.

இந்தச் சம்பவத்தின் பின்னணி என்ன?

அந்த தந்தை ஏன் தனது பிள்ளைகளை கொலை செய்தார்?

சர்வதேச ஊடகங்களிலும், புலம்பெயர் ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களிலும் இந்த கொலைக்கான காரணங்கள் என்று பல விடயங்கள் பேசப்பட்டுக்கொண்டிருக்க, உண்மை என்ன என்ற தேடலில் பயணம் மேற்கொண்டது IBC- தமிழ்.

உண்மையைத் தேடிய அந்தப் பயணத்தின் முதலாவது பதிவு இது: