குட்டிமணியின் மனைவி லண்டனில் காலமானார்!

Report Print Gokulan Gokulan in புலம்பெயர்

டெலோ அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவரும், டெலோ அமைப்பின் செயலதிபருமான குட்டிமணி (யோகச்சந்திரன் இராசரத்தினம்) அவர்களின் மனைவியான திருமதி இராசரூபராணி இராசரெத்தினம் இன்று லண்டனில் தனது 69 வயதில் காலமானார்.

குட்டிமணி ஈழவிடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவர்.

1960களின் கடைசியில் இருந்து விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த குட்டிமணி, 1979 ஆம் ஆண்டில் இருந்து ஆயுதப் போராட்டத்தில் தீவரமாகக் குதித்திருந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட பல முக்கியஸ்தர்களுடன் இணைந்து செயற்பட்டுவந்த குட்டிமணியை 1981ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ம் திகதி சிறிலங்கா பாதுகாப்பு படை கைதுசெய்தது.

மரணதண்டணை விதிக்கப்பட்ட நிலையில் வெலிக்கடை சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த குட்டிமணியை, 1983 ஜுலை இனவன்முறை நேரத்தில் சிறை அதிகாரிகளின் துணையுடன் சிங்கள காடையர்கள் படுகொலை செய்திருந்தார்கள்.

குட்டிமணி சிறையில் இருந்த காலப்பகுதியில் 1982ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் திகதி சிறிலங்காவின் நாடாளுமன்றத்திற்கு தமிழர் விடுதலைக் கூட்டணியால் உறுப்பினராக நியமிக்கப்ட்டிருந்தார். யாழ் வட்டுக்கோட்டை தொகுதியின் உறுப்பினர் திருநாவுக்கரசு அவர்களின் மரணத்தை அடுத்து அவருடைய இடத்திற்கு குட்டிமணியை த.வி.கூட்டணி நியமித்திருந்தது. ஆனாலும் ஜே.ஆரின் உத்தரவின் பெயரில் சிறைச்சாலை ஆணையாளரின் அனுமதி வழங்கப்படாததன் காரணமாக அவரால் நாடாளுமன்றம் சென்று சத்தியப்பிரமாணம் எடுக்கமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.