இலங்கையில் 405பேர் HIV தொற்று நோயால் பாதிப்பு

Report Print Amirah in நோய்
110Shares

வருடத்தின் கடந்த 10மாதங்களில் HIV தொற்று நோயால் பாதிக்கப்பட்டு 34பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த நோயினால் ஆண்களே அதிகமாக HIV தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக பாலியல் நோய்கள் மற்றும் தேசிய எயிட்ஸ் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் சிசிர லியனகே கூறியுள்ளார்.

இதேவேளை, வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 405பேர் HIV தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்,இந்த தொற்று நோயாளர்களில் 65வீதமானோர் ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் மேல் மாகாணத்திலேயே அதிகமான எயிட்ஸ் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக பாலியல் நோய்கள் மற்றும் தேசிய எயிட்ஸ் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் சிசிர லியனகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments