இளம் சமூகத்தினர் மத்தியில் எச்.ஐ.வி. பரவல் அதிகரிப்பு!

Report Print Steephen Steephen in நோய்

இலங்கையில் இளம் சமூகத்தினர் மத்தியில் எச்.ஐ.வி. எயிட்ஸ் வைரஸ் பரவி வருவது அதிகரித்துள்ளது.

15 வயதிக்கும் 24 வயதிற்கும் இடைப்பட்ட இளம் வயதினர் மத்தியில் இந்த வைரஸ் அதிகளவில் பரவி வருகிறது.

பாதுகாப்பற்ற உடல் உறவு காரணமாகவே இலங்கையில் 95 வீதமானவர்களுக்கு எச்.ஐ.வி எயிட்ஸ் வைரஸ் பரவியுள்ளதாக சமூக மருத்துவம் தொடர்பான விசேட நிபுணர் ஜானகி வித்தியா பத்திரண தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள அனைத்து தேசிய மற்றும் ஆதார வைத்தியசாலைகளில் இயங்கும் பாலியல் நோய் தொடர்பான பிரிவில் எச்.ஐ.வி. தொற்று இருக்கின்றதா என்பது அறிய பரிசோதனைகளை மேற்கொள்ளலாம்.

Comments