ஆறு பேரில் ஒருவருக்கு குணப்படுத்த முடியாத நோய்

Report Print Steephen Steephen in நோய்

அனைத்து நபர்களிலும் 6 பேரில் ஒருவர் குணப்படுத்த முடியாத நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், ஆஸ்துமா மற்றும் மூட்டுவலி போன்றவை குணப்படுத்த முடியாத நோய்களில் பிரதான நோய்கள் என சனத் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி சந்திராணி ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.

வயதானவர்களுக்கு இந்த குணப்படுத்த முடியாத நோய்கள் பரவும் வீதம் அதிகரித்துள்ளதுடன் ஆண்களை விட பெண்களே அதிகளவில் இந்த நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் குறைந்த கல்வி அறிவை கொண்டுள்ள நபர்களிடம் குணப்படுத்த முடியாத பிரதான நோய்கள் பரவுவது அதிகரித்துள்ளதை காண முடிவதாகவும் சனத் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி சந்திராணி ஜயவிக்ரம கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments