டெங்கு அபாய சூழல் : வெளிநாட்டுப் பெண்ணுக்கு எச்சரிக்கை

Report Print Ajith Ajith in நோய்

டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சுற்றுச் சூழலை அசுத்தமாக வைத்திருந்த வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் சுகாதார பரிசோதகர்களால் எச்சரிக்கப்பட்டுள்ளார்.

டெங்கு நுளம்பு பெருகுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று கொழும்பில் சில பகுதிகளில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சு மற்றும் கொழும்பு மாநாகர சபை ஆகியன இணைந்து இந்தப் பணிகளை முன்னெடுத்துள்ளன.

முகத்துவாரம், மட்டக்குளி உள்ளிட்ட சில பகுதிகளில் இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போதே உள்நாட்டுப் பிரஜைகள் பலருடன், வெளிநாட்டுப் பெண் ஒருவருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Comments