கிளிநொச்சியில் டெங்கு நோய் பரவும் அபாயம்

Report Print Mohan Mohan in நோய்
27Shares

கிளிநொச்சியில் கடந்த சில நாட்களில் 14 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக மாவட்ட பொதுச் சுகாதார பணிமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலானது மிகத் தீவிரமாக பரவக்கூடிய அபாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் டெங்கு நோயில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதே வேளை காய்ச்சல் இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைகளில் உரிய பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் கூறப்பட்டுள்ளது.

கடந்த வருடம் வரை கிளிநொச்சி மாவட்டம் டெங்குநோய் அற்ற மாவட்டமாக காணப்பட்டு வந்த நிலையில் இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் ஏழு நாட்களில் கிராஞ்சி, சிவபுரம், மலையாளபுரம், அம்பாள் குளம், கணேசபுரம், வலைப்பாடு, கல்மடு, செல்வாநகர் ஆகிய இடங்களில் இருந்து டெங்கு காய்ச்சல் காரணமாக கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலையில் 14 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான சூழலில் வேகமாக பரவிவரும் டெங்கு நோயில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள டெங்கு நுளம்பு பெருகுமிடத்தை முற்றாக அழித்தொழிக்குமாறு சுகாதாரப் பிரிவினர் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Comments