புத்தளத்தில் நாய்களுக்கு பரவி வரும் நோய்!

Report Print Steephen Steephen in நோய்
91Shares

புத்தளம் மாவட்டத்தின் புத்தளம், கல்பிட்டி, ஆனமடுவ, வண்ணாத்துவில்லு உட்பட பல பிரதேசங்களில் வாழும் நாய்கள் மயிர் கொட்டும் நோய்க்கு உள்ளாகி இருப்பதாகவும் இதன் பின்னர் நாய்கள் உடல் நலிவடைந்து இறப்பதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

மயிர் கொட்டு நோய்க்கு உள்ளாகியிருக்கும் பெரும்பாலான நாய்கள் புத்தளம் மாவட்டத்தின் பல பிரதேசங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மயிர் கொட்டிய பின்னர், நாய்கள் தோல்கள் மாத்திரமே உடலில் காணப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

மயிர் கொட்டிய பின்னர் நாய்களின் உடலில் புண்கள் ஏற்பட்டு அவற்றிடம் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கின்றன.

எவ்வாறாயினும் நாய்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த நோய் குறித்து பொது சுகாதார துறையினர் போதிய கவனத்தை செலுத்தவில்லை என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த நிலையில், நாய்களின் மயிர் கொட்டும் நோய்க்கு பூஞ்சனம் அல்லது பக்டீரியா பரவல் காரணமாக இருக்கலாம் எனவும் இதனால், மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நோய் தொற்றுக்கு உள்ளான நாய்களை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து வந்து மருந்து ஊசி செலுத்திக்கொள்வதன் மூலம் நோயை கட்டுப்படுத்தலாம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் கட்டாக்காலி நாய்களே இந்த நோயினால் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Comments