திருகோணமலையில் டெங்கு நோய் தாக்கம் அதிகரிப்பு

Report Print Victor in நோய்

திருகோணமலையில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சோடு இணைந்து கல்வி அமைச்சும் ஈடுபட்டுள்ளது.

இது குறித்து இன்று கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் ஊடகவியளாலர் சந்திப்பொன்று மாகாண கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணி அவர்களினால் நடாத்தப்பட்டது.

இச் சந்திப்பில் திருகோணமலை பட்டினமும் சூழலும் மற்றும் உப்புவெளி பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதுடன், அதனைக் கட்டப்படுத்த பாடசாலைகளும், ஏனைய பகுதிகளையும் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

முக்கியமாக மேற்குறித்த பிரதேங்களில் நடைபெறுகின்ற தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் இன்றிலிருந்து 2 வாரங்களுக்கு நிறுத்த வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதுடன், இதனை மீறும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாகாண கல்வி அமைச்சர் கூறினார்.

குறிப்பாக அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் டெங்கு நுளம்புகளின் ஆதிக்கம் நிலவுவதால் பகுதிநேர வகுப்புகளை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்தார்.

Comments